பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகனான பகத் பாசில் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன், வேட்டையன், மாரீசன், இதயம் முரளி முதலிய படங்களில் நடித்து உள்ளார்.
தெலுங்கில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார்.
இயக்குனர் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகி வரும் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படத்தில் கதாநாயகனாக பகத் பாசில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்குனர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சவுரப் சக்தேவா இணைந்துள்ளார்.
இவர் தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்த நிலையில் ஏற்கனவே ‘புஷ்பா’ திரைப்படத்திலும் பகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார்.
மலையாளத்தில் கடந்த வருடம் இறுதியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘எக்கோ’ என்கிற படத்தில் குரியச்சன் என்கிற மர்ம நபராக பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது நடித்துவரும் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
















