2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் ஒன்றை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கிணங்க, தொடர்புடைய விடைத்தாள் மதிப்பீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (14) முதல் ஜூலை 28 வரை இணையவழியில் (Online) ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை இலங்கைத் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic என்ற இணைய இணைப்பின் ஊடாக இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
இது தொடர்பான விசாரணைகளுக்கு 0112784208, 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.











