தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்வு, மருதங்கேணி கலாசார மத்திய நிலையத்தில் இன்று மிக பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகி வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்படவுள்ளது
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பின்வரும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் அவர்களில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், (கடற்றொழில் நீரியல்வளங்கள் அமைச்சர்) மற்றும் பிரசன்ன குணசேன
(போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்)மற்றும் மற்றும் பொதுமக்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் நோக்கோடும், மக்களின் பங்களிப்போடும் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, பிரதேச மக்களுக்குத் தங்கள் கருத்துக்களை அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் நேரடியாகத் தெரிவிப்பதற்கான சிறந்ததொரு தளமாக அமைந்தது.













