கேகாலை, கரந்துபன சந்தியில் இன்று (03) காலை சுமார் 6.15 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனையிலிருந்து கண்டிக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும், திகனையிலிருந்து கொழும்புக்குச் சென்ற தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












