மினுவாங்கொட, அம்பகஹவத்த பகுதியில் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்தனர்.
சோதனையின்போது அவரிடமிருந்து ஆறு கிலோ கிராம் ஹஷிஷ் கைப்பற்றப்பட்டது.
தொடர் விசாரணையின்போது, சந்தேகநபர் ஒருவரின் வீட்டில் மேலும் 6 கிலோ கிராம் ஹஷிஷ் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மினுவாங்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.













