ஒரு வருடமாக விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டின் ஒரு பாகம், இன்னும் சிறிது நேரத்தில் நிலவில் மோத உள்ளது.
ஒரு பேருந்தின் அளவுக்குப் பெரியதும், 4,000 கிலோகிராம் எடை கொண்டதுமான இந்தப் பாகம், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்து, மணிக்கு 8,690 கிலோமீட்டர் வேகத்தில் நிலவின் மேற்குப் பகுதியில் மோதவுள்ளது.
இதனால் சுமார் 17 மீட்டர் விட்டமுள்ள ஒரு பள்ளம் உருவாகும் என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவித்தன.

















