வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பெண்ணொருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஆனமடுவ பொலிஸ் பிரிவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணால் வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர் நேற்று முன்தினம் (13) காலை இவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாம்புரியப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

















