• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொக்குத்தொடுவாயில் தமிழர்களது தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைக்கின்ற விவகாரத்தை கவனத்திற்கு கொண்டுவந்தார் ரவிகரன் எம்.பி!

கொக்குத்தொடுவாயில் தமிழர்களது தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைக்கின்ற விவகாரத்தை கவனத்திற்கு கொண்டுவந்தார் ரவிகரன் எம்.பி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/19
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக வயல்நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் ஒருவரால் சட்டவிரோதமாக அத்துமீறி உப்பளம் அமைக்கப்படுகின்ற விடயம்தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் 19.08.2026 இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்படி விடயத்தினை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் இவ்வாறு தமிழ்மக்களின் தனியார் வயல்காணிகளை அத்துமீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தனியார் ஒருவர் உப்பளம் அமைக்கின்றமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது வன்னிப் பகுதியிலோ வடமாகாணத்திலோ தனியார் காணிகளை ஆக்கிரமித்து உப்பளங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் தமிழ்மக்களின் 54ஏக்கர் தனியார் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்கப்பட்டுவருவதாகவும், மாத்தளன் பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு ஏற்ற அரச காணிகள் காணப்படுவதாகவும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, இந்தவிடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன் கலந்துரையாடி அந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த விடயத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்டு, அந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராயப்படுமென அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விடயம் தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் அத்துமீறி அமைக்கப்படும் உப்பளம் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக முல்லைத்தீவில் குரல் எழுப்பி வருகின்றோம்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால் தடுத்து நிறுத்துவதற்குரிய கடிதங்கள் உரிய தரப்பினருக்கு அனுப்பப்பட்டன.

இவ்வாறான அடாத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவது மகாவலி அதிகார சபை தான்.

இது தொடர்பாக கடந்த 2026.03.12 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கௌரவ அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்பட்டது.

குறித்த பகுதி தனியார் காணியில் அமைக்கப்படவில்லை என மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினரால் அன்றைய தினம் குறிப்பிடப்பட்டது.

அமைச்சர் அவர்களால் இப்பிரச்சினையை மாவட்டச் செயலாளர் தலைமையில் ஆராயுமாறு அன்றைய நாள் அமைச்சரால் பணிக்கப்பட்டது.

பின்னர் எமது, கோரிக்கைக்கு அமைய , மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரின் உத்தரவுக்கு அமைய குறித்த பகுதி தனியார் காணியே என நில அளவை அத்தியேட்கரால் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், தனியார் காணியில் அமைக்கப்படும் மேற்படி உப்பளம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு 2026.07.28 அன்று கடிதம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டது.

அதன் பின்னரும் இலங்கை மகாவலி அதிகார சபை அதற்கு இணங்காத வகையில் தன்னிச்சையாக செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.

மகாவலி அதிகார சபை இந்தத்தீவிலுள்ள அரசாங்கத்துக்கும் கட்டுப்படாமல் வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் எண்ணத்தோடு தன்னிச்சையாக செயற்படும் ஓர் அமைப்பாகவே செயற்படுகிறது.

கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் அடாத்தாக அமைக்கப்பட்ட உப்பளமும் அதற்கு ஒரு சான்று என இப்பேரவையில் மீண்டும் பதிவுசெய்கிறேன். தேவைப்பட்டால் இவற்றுக்கான சான்றுகளை உரிய தரப்பினர்க்கு வழங்குவோம் எனவும் தெரிவிக்கின்றேன் – என்றார்.

blank

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்!

Next Post

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

Related Posts

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!
கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-24
Next Post
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

0
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: