இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் என அதன் பதில் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி மற்றும் ஊழல் குறித்து சுகாதார அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் அளித்த ஒரு பொது சுகாதார ஆய்வாளர், நிர்வாக விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் புறம்பாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் குறித்த மேலதிக கலந்துரையாடல்களுக்குப் பின்னர் , நாளை முதல் தொடங்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக இன்று நடைபெறும் கலந்துரையாடலில் இறுதி முடிவு எடுக்கப்படும் என உபுல் ரோஹன தெரிவித்தார்.













