ஹட்டன் பகுதியை மையமாக கொண்டு இயங்கும் பிரணவம் அறக்கட்டளை அதன் ஸ்தாபக தலைவர் சித்ரவேல் ரமேஷ்பாபு ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் இலங்கலைஞர் மண்டபத்தில் முதலாவது சைவ மாநாடு இடம்பெற்றது
வாழ்வியலில் திருமுறைகள் -திருமுறைகளில் வாழ்வியல் எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இவ் மாநாட்டில் முதலாவதாக ஹட்டன் மந்தாகினி திருஞான சம்பந்தர் அறநெறி மாணவர்களால் திருதொண்டர் புராணம் இசைக்கப்பட்டு ஊர்வலமாக செல்லப்பட்டது. தொடர்ந்து சமயக்குறவர்கள் நால்வரை அடிப்படையாக கொண்டு இலங்கையை சேர்ந்த ஆன்மீக பேச்சாளர்களின் சொற்பொழிவு இடம்பெற்றதோடு பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன
இதன் போது திருபேரூர் ஆதீனம் சாந்தளிங்க மருத்தாசல அடிகளார், திருஞானசம்பந்தர் ஆதீனம் ஸ்ரீமத் சிவாக்கார தேசிக சுவாமிகள் உட்பட பல ஆன்மீக பேச்சாளர்கள், சமய தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்












