• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

Hanushya P by Hanushya P
2026/08/24
in இலங்கை, மன்னாா்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் முருங்கன் மற்றும் ஆட்காட்டி வெளியில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையினரின் களஞ்சிய சாலைகள் ஊடாக நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நெற்செய்கை மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக காணப்படுகிறது. கடந்த டிட்வா புயல் காரணமாக மன்னார் மாவட்ட விவசாயிகள் ஜனவரி  மாதத்திற்கு பின்னரே செய்கை மேற்கொண்டு அதற்குரிய அறுவடைகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மேற்கொண்டிருந்தார் கள்.

அதன் பின்னர் அவர்கள் இந்த வருடத்திற்குரிய சிறுபோக செய்கையையும் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த வருடம் ஜனவரிக்குப் பின் விதைத்த விவசாயிகளின் 3000 மெட்ரிக் தொன் அளவிலான சிவப்புச் சம்பா மற்றும் ஆட்டக்காரி போன்ற நெல் இனங்களும் மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளினால் பேணிப் பாதுகாத்து வரப்படுகிறது.

இதனையும் நாங்கள் நியாயமான விலையில் அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக நாட்டு அரிசியின்(நெல்) விலை 120 ரூபாய் சம்பா அரிசியின்(நெல்) விலை 130 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அதேபோல் கீரிச் சம்பா வாக (நெல்) இருந்தால் 140 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2, 000 மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முருங்கன் மற்றும் ஆட்காட்டி வெளியில் உள்ள அவர்களது களஞ்சியங்கள் ஊடாக நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 250 மெட்ரிக் தொன் அளவில் நெல்லை அவர்கள் கொள்வனவு செய்திருக்கிறார்கள். இன்னும் 1, 750 மெட்ரிக் தொன் அளவில் கொள்வனவு அவர்கள் செய்ய இருக்கிறார்கள்.

இதனைவிடஇ தற்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள்இ அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மில் உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 25 மில்லியன் ரூபாய் நிதி வழங்கிஇ அவர்கள் ஊடாகவும் விவசாயிகளிடம் உள்ள நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் திங்கட்கிழமை(24) 4 நெல் உரிமையாளர்கள் வருகை தந்து தமது உடன்படிக்கையை கையப்பமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டு,  அவர்கள் ஊடாகவும் தற்பொழுது விவசாயிகளிடம் உள்ள நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதனைவிட விசேட ஏற்பாடாக மன்னாரில் விளைவிக்கப் படுகின்ற சிவப்புச் சம்பா மற்றும் ஆட்டக்காரி நெல் இனங்கள் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதான உணவாக இருப்பதன் காரணமாக அங்குள்ள மில் உரிமையாளர்கள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து அந்த நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவேஇ யாழ்ப்பாண மாவட்ட மில் உரிமையாளர்கள் தொடர்பு கொண்டு மன்னாரில் நெல் கொள்வனவுச் செய்வதற்குரிய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 25 மில்லியன் என்ற அரசாங்கத்தின் முற்பணம் வழங்கப்படவிருக்கிறது.

அவர்கள் 8 மாதங்களுக்குள் முற் பணத்தினை வட்டி இல்லாமல் எந்தத் தரகு கட்டணமும் இல்லாமல் திருப்பிக் கொடுக்க இருக்கிறார்கள்.

இந்தச் செயல் திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள மில் உரிமையாளர்கள் தொடர்பு கொண்டு முறை பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களது நெல் கொள்வனவினை மேற்கொள்ள முடியும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேபோல் நெல்லை வைத்திருக்கும் மக்கள் வெகுவிரைவில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்குக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இன்னும் இரண்டு வாரங்களில் சிறுபோக த்திற்குரிய அறுவடை நடைபெற இருக்கிறது. எனவேஇ விவசாயிகள் நேரடியாக நெல் சந்தைப்படுத்தும் நிலையத்திற்கு சென்றுஇ தங்களுடைய நெல்லை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் நெல் சந்தைப்படுத்தும் நிலையத்தில்தான் இந்தப் படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது.

ஆனால்இ தற்போது சம்பந்தப்பட்ட விவசாய சேவை மையங்களில் இந்தப் படிவங்களைப் பெற்று நிரப்பிஇ அதை மாதிரி நெல்லினை (ளயஅpடந) நெல் சந்தைப்படுத்தும் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுஇ அதன் ஈரப்பதம் உறுதிப்படுத்திய பின்இ நேரடியாகச் சம்பந்தப்பட்ட நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியசாலையில் உங்களுடைய நெல்லை விற்பனை செய்ய முடியும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் அறியத் தருகிறோம்.

அதேபோல்இ தனிப்பட்ட நெல் உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகவும் எதிர்காலத்திலே நெல்லை கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.என அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: 000 metric tons2K. KanageswaranMannar DistrictPaddy Marketing Boardpurchase paddy
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

Next Post

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

Related Posts

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!
இலங்கை

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

2026-08-24
இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!
இலங்கை

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

2026-08-24
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!
இலங்கை

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

2026-08-24
அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!
இலங்கை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை வீதி உலா: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

2026-08-24
மின்சாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக தகவல்!
இலங்கை

எல் நினோ தாக்கத்தால் மின்வெட்டு ஏற்படுமா?

2026-08-24
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மசாலாப் பொருட்கள் அடங்கிய சரக்கு பறிமுதல் !
இலங்கை

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மசாலாப் பொருட்கள் அடங்கிய சரக்கு பறிமுதல் !

2026-08-24
Next Post
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

0
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

0
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

0
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

0
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

0
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

2026-08-24
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

2026-08-24
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

2026-08-24
இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

2026-08-24
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.