போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பனதுர நிலங்க’ ஆகிய இரு பிரதான சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் சந்தேகநபர், தடுப்புக் காவல் காலம் முடிவடைந்த நிலையில் இன்று (25) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவரை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வந்த நிலங்க சம்பத் சில்வா என்ற ‘பனதுர நிலங்க’ என்பவரும் இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இவரையும் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர பிறப்பித்துள்ளார்.













