• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

Hanushya P by Hanushya P
2026/08/30
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளம் – திபெத் எல்லை அருகே கடந்த 26 திகதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.

மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று வரை 600-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன.

இது நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் குவிந்துள்ளன. இதனால் புதிதாக வரும் உடல்களை வைக்க இடம் இல்லாமல் வைத்தியசாலை நிர்வாகங்கள் தவித்து வருகின்றன.

எனவே தற்காலிக பிணக்கிடங்குகள் உருவாக்கப்பட்டு உடல்களை சேமிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.

அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இன்னும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பற்றிய தகவல் இல்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மாயமானவர்களில் தமிழர்கள் உள்பட 167 இந்தியர்களும் அடங்கியிருப்பதால் இந்தியாவிலும் தொடர்ந்து சோகம் நிலவி வருகிறது.

இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாக இன்றும் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.

இரவு-பகலாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று வரை 4,451 பேரை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் போட்டேகோஷி ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுக்களை விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இமயமலை எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் இந்த ஆறு, கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின்போது பெருமளவிலான நீரை மத்திய நேபாளப் பகுதிக்குக் கொண்டு சென்றது.

இந்நிலையில் நேபாள சுரங்கங்களில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் என்றும், 100க்கும் மேற்பட்ட நீர்மின் பணியாளர்களும் சிக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும், சீனாவும் சிறப்பு மீட்புக் குழுக்களை அங்கு அனுப்பியுள்ளன.

மறுசீரமைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு பில்லியன் கணக்கில் செலவாகும் என நேபாளம் கருதுகிறது. இதனால் சர்வதேச ஆதரவையும் நாடுகிறது.

இதனிடையே பனிப்பாறை கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. பனிப்பாறை சரிவுடன் இந்த பேரிடர் தொடர்புபடுத்தப்பட்டதை அடுத்து, உத்தரகாண்ட் இமயமலைப் பனிப்பாறைகளையும் பனிப்பாறை ஏரிகளையும் கண்காணித்து வருகிறது.

நேபாளத்திற்கு உலகளாவிய உதவிகள் குவிந்து வருகின்றன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வனத்துறை ஆகியவை மனிதாபிமான உதவிகளுக்காக மில்லியன் கணக்கில் வழங்குவதாக உறுதியளித்துள்ளன. அதே நேரத்தில் சீனாவும் உதவி வழங்க முன்வந்துள்ளது.

Related

Tags: 000 people3death tollNepalNepal-Tibet borderreached 734.unprecedented disaster
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

Next Post

ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

Related Posts

காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி? நிலாந்தன்.
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி? நிலாந்தன்.

2026-08-30
தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!
இந்தியா

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

2026-08-29
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

2026-08-29
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

2026-08-29
நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள்  உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!
இந்தியா

நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!

2026-08-29
இலங்கை நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி!
உலகம்

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!

2026-08-29
Next Post
ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

0
நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

0
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

0
கந்தளாயில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

கந்தளாயில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

0
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

சுங்கத் திணைக்களத்தின் அலட்சியத்தால் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.