மூவரின் உயிரைப் பறித்த மட்டக்குளிய விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ சட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து அதிவேகமாக மோதி இந்த பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர்.
விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.













