• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/09/17
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமன்றி, தமிழ்மொழி, சங்கம், கலை மற்றும் பண்பாட்டின் தொன்மையான மையப் புள்ளியாகத் திகழ்கிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலின் குடமுழுக்கு விழா 2021-ல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

தொடர்ந்து கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதியில் குடமுழுக்கை நடத்த ரூ.28 கோடி மதிப்பில் கோயிலின் 12 கோபுரங்களுக்கும் வண்ணம் பூசும் பணிகள், சேதமடைந்த சுதைச் சிற்பங்களைச் சீரமைப்பது உள்பட பல்வேறு திருப்பணிகளும் நடந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பின் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.

இதை முன்னிட்டு கோயிலுக்குள் வடக்காடி வீதியில் யாகசாலை பூஜைகளுக்காக 184 குண்டங்கள் அமைக்கப்பட்டன. செப்.6-ல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. செப்.11-ம் திகதி  மாலை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு மருந்து சாற்றும் வைபவத்தையொட்டி செப்.11 முதல் 16-ம் திகதி வரை மூலவர் சந்நிதிகள் அடைக்கப்பட்டுள்ளன. யாகசாலை பூஜைகள் தொடங்கி 6-ம் நாளான நேற்று செப்.16-ம் தேதி காலை 5 மணியளவில் பத்தாம் கால யாக வேள்வி முடிந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

காலை 6 மணிக்குள் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லெட்சுமி, பத்ரகாளி, 63 நாயன்மார்கள் மற்றும் சுற்றுக் கொடி மரங்கள் உட்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு கோயிலில் உள்ள 4 கோபுரங்கள் உட்பட 12 கோபுரங்களுக்கும் நிலை மாலைகள் சாற்றப்பட்டன.

இன்று (செப்.17) காலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ம் கால யாக வேள்வி நடைபெற்றது. பின்பு கலசங்கள் புறப்பாடாகி காலை 7.40 மணியளவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சந்நிதிகளின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரக் கலசங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்குக் குடமுழுக்கும், காலை 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரர் சுவாமிக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்கில் பங்கேற்க 3 ஆயிரம் உபயதாரர்கள், பொது மக்களில் 2 ஆயிரம் பக்தர்களுக்குக் குலுக்கல் முறையில் பாஸ் உட்பட 11 ஆயிரம் பேருக்குப் பாஸ்கள் வழங்கப்பட்டன. இதில் கோயிலின் மேல்தளத்தில் 9 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் பல்வேறு மடங்களின் ஆதீனங்கள், அமைச்சர்கள் ரமேஷ் (அறநிலையத் துறை), நிர்மல் குமார் (சட்டத் துறை), பெ.விஸ்வநாதன் (உயர் கல்வி) மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீஸாருடன் மூன்றடுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்கள், 12 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் 70 மருத்துவர்கள் மற்றும் 150 துணை மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருந்தன.

பக்தர்கள் நெரிசலின்றி குடமுழுக்கைக் காணும் வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், பார்க்கிங் பகுதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் 51 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு நேரலை செய்யப்பட்டன்.

அனைத்துத் துறைப் பணிகளையும் ஒருங்கிணைக்க புதுமண்டபத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டன. 1800-425-6781 மற்றும் 1800-425-6782 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

Next Post

வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Related Posts

வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கை

வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2026-09-17

தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!
இலங்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை முன்னறிவிப்பு

2026-09-17
ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
இலங்கை

ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

2026-09-17
22 ஆவது திருத்தம் என்பது ‘டித்வா’ போன்றே மற்றுமொரு பாரதூரமான பேரழிவாகும்.
இலங்கை

22 ஆவது திருத்தம் என்பது ‘டித்வா’ போன்றே மற்றுமொரு பாரதூரமான பேரழிவாகும்.

2026-09-17
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

2026-09-16
Next Post
வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

0
பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

0
பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!

பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!

0
தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!

இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை முன்னறிவிப்பு

0
வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2026-09-17
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

2026-09-17
பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

2026-09-17
பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!

பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!

2026-09-17
தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!

இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை முன்னறிவிப்பு

2026-09-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.