ரஷ்யாவின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவில் புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எரிபொருட்களைக் கொள்முதல் செய்யும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும், மொஸ்கோ மீதான தடைகளைத் தவிர்க்க உதவும் ஏனைய நாடுகளுக்கும் எதிராக 100 சதவீதம் வரை வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கிறது.

















