• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் பெரும்பாலான ஈர வலயப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் மழையின் தீவிரம் ஓரளவு குறைந்திருந்தாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் அவர் கூறினார்.

இன்றுக் காலை நிலவரப்படி களனி ஆற்றின் மேற்பகுதிகளில் 100 முதல் 125 மில்லி மீற்றர் வரையிலும், ஏனைய பல ஆற்றுப்படுகைப் பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 50 முதல் 80 மில்லி மீற்றர் வரையிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்தினம் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கையின் மேற்பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், இதனால் பதேகம, உடுகம, அக்குரஸ்ஸ மற்றும் தல்கஹகொட பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மில்லக்கண்ட பகுதியிலும் நீர்மட்டம் உயர்ந்து சிறிய அளவிலான வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை, ஹங்வெல்ல, லென்கோஸ் மற்றும் அவிசாவளை பகுதிகளில் களனி ஆற்றின் நீர்மட்டமும் உயர்ந்த நிலையில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றின் நாவலப்பிட்டி மற்றும் பேராதனை பகுதிகளிலும், அத்தனகலு ஓயாவிலும் நீர்மட்டம் ஓரளவு குறைந்துள்ள போதிலும், அனைத்து ஆறுகளும் அபாய மட்டத்திற்கு அண்மையில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்த்தேக்க திறன் தற்போது 34 முதல் 35 சதவீதமாக உள்ளதாகவும், பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் குறைந்த மழைவீழ்ச்சி பெற்ற வறண்ட வலயங்களில் அமைந்துள்ளதால் இந்த நிலை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மகாவலி ஆற்றின் மேற்பகுதிகளில் கிடைத்த மழைவீழ்ச்சியால் கொத்மலை மற்றும் பொல்கொல்ல போன்ற நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்தார்.

மேலும், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் நீச்சல், நீர்விளையாட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 

இத்தகைய செயல்கள் உயிருக்கு ஆபத்தானவை எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Related

Tags: flood riskIrrigation Deptrainfall raisesஆறுகள்கனமழைவெள்ளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

Next Post

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

Related Posts

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!
இலங்கை

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

2026-09-21
சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!
உலகம்

சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

2026-09-21
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!
ஆசிரியர் தெரிவு

பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

2026-09-21
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

2026-09-21
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!
இலங்கை

பாதகமான வானிலையால் நாடு முழுவதும் 38 பாடசாலைகளுக்கு பூட்டு!

2026-09-21
பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையான விமல்!
இலங்கை

பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையான விமல்!

2026-09-21
Next Post
திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்

0
ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

0
சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

0
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

0
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

0
திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்

2026-09-21
ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

2026-09-21
சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

2026-09-21
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

2026-09-21
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

2026-09-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.