2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை) எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 61.6 சதவீத அதிகரிப்பாகும்.
2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 2,520.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டிருந்தது.
இதன்படி, மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 1,551.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
அதேவேளையில், 2026 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 450.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இது 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76.5 சதவீத அதிகரிப்பாகும்.
2025 ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 255.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதன்படி, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 195.4 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
மேலும், 2025 ஆகஸ்ட் மாதத்தில் 202.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிச் செலவு, 2026 ஆகஸ்ட் மாதத்தில் 321.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிச் செலவில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 58.7 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.















