இன்று (07) அதிகாலை, நிகவெரட்டியாவிலிருந்து அனுராதபுரத்திற்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, திரப்பணயின் கல்குளமப் பகுதியில் A-09 வீதியை விட்டு விலகிச் சென்று மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 01.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மொத்தம் 14 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகளில் 12 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 14 பயணிகளும் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து திரப்பண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













