• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

KP by KP
2026/10/18
in இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த வாரம் ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.அது தொடர்பான காணொளிகள் அதிகளவு பகிரப்பட்டன.கைபேசிகளின் காலத்தில் ஓர் ஆசிரியர் தினம் தொடர்பான காணொளிகள் அவ்வளவு பரவலாகப் பகிரப்பட்டது இந்தமுறைதான் எனலாமா?

அந்த காணொளிகளில் அதிகமானவை நடனக் காட்சிகள்.ஆசிரியர்கள் ஏதோ ஒரு பாட்டுக்கு நடனமாடுகிறார்கள்.அந்தப் பாட்டுகளில் பெரும்பாலானவை சினிமாப் பாடல்கள்.இன்னொரு தொகுதி காணொளிகளில் ஆசிரியர்கள் பாட்டுப் பாடுகிறார்கள்.அந்தப் பாட்டுகளும் அதிகமானவை சினிமாப் பாடல்கள்தான்.சிறு தொகுதி காணொளிகளில் ஆசிரியர்கள் நாடகம் நடிக்கிறார்கள்.அது ஒப்பீட்டளவில் குறைவு.

ஒரு நடன ஆசிரியை சொன்னார்,தன்னுடைய பள்ளிக்கூடத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று தீர்மானித்தபோது,எது பாடல் என்பதனை தீர்மானிப்பதிலேயே வெவ்வேறு அளவுகோல்கள் முன்வைக்கப்பட்டதாக. பாடல்கள் அனேகமாக சினிமா பாடல்கள்தான்.அதில் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக அமையக்கூடிய ஒரு பாடலை தேர்வு செய்யவேண்டும் என்று ஆசிரியர்கள் விரும்பியிருக்கிறார்கள்.அந்தப் பாடலுக்கு நடனமாடும் போதும் அந்த நடனம் முன்னுதாரணமாக அமையவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.அதாவது மாணவர்களுக்கு முன் ஆடினாலும் சரி, பாடினாலும் சரி,நடித்தாலும் சரி,அது பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடம் இருந்திருக்கிறது. அவ்வாறு முன்னுதாரணமாக இருப்பதற்காக,பண்பாட்டு ரீதியான அளவுகோல்களை வைத்துக்கொண்டு எந்தப் பாடலுக்கு? எப்படி ஆடுவது? என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சிங்களப் பகுதிகளில் இருந்து கிடைத்த நடனக் காட்சிகளில் அவ்வாறான பண்பாட்டு இறுக்கங்கள் இருக்கவில்லை.அங்கே ஆசிரியர்கள் உற்சாகமாகவும் பண்பாட்டு இறுக்கம் இல்லாமலும் ஒப்பீட்டளவில் சுதந்திரமாகவும் ஆடினார்கள்.சில சிங்களப் பள்ளிக்கூடங்களில் நடனக் காட்சிகள் அல்லது நாடகங்கள் கற்பனைவளம் மிக்கவைகளாக, படைப்புத்திறன் மிக்கவைகளாக, ரசிக்கத்தக்கவைகளாக இருந்தன.தமிழ்ப் பகுதிகளில் கிடைத்த பல காணொளிகளில் பெரும்பாலானவை  பண்பாட்டு இறுக்கம் காரணமாக யாந்திரிகமானவைகளாகக் காணப்பட்டன.அதனால் அது முழுமையாக,கலையாக பரிணமிக்கவும் இல்லை.நாடகங்களும் அப்படித்தான்.

என்றாலும் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் பார்வையாளர்களாக இருக்கத்தக்கதாக ஆசிரியர்கள் அவைக்காற்றுவது என்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.அது ஆசிரியர்-மாணவ உறவில் இருக்கக்கூடிய இறுக்கத்தையும் இயல்பின்மையையும் நீக்கக்கூடியது.இந்த அடிப்படையில் பார்த்தால் இம்முறை ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் சந்தோஷமானவை;கலைப் பரிமாணம் கொண்டவை; ஆசிரியர்-மாணவ உறவில் இறுக்கத்தைத் தளர்த்துபவை.

போட்டிப் பரீட்சைகள் காரணமாக தனியார் கல்வி நிறுவனங்கள் பாடசாலைகளை விடவும் முக்கியத்துவம் பெறும் ஒரு கல்விச் சூழலில்,இந்த ஆண்டு ஆசிரியர் தினம் பள்ளிக்கூடங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டிருக்கிறது.அதேசமயம் இதே காலப்பகுதியில் நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.அவையும் ஆசிரிய-மாணவ உறவுகளுடன் தொடர்புடையவை.

முதலாவது ஒரு காணொளி.சமூக ஊடக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.அது வவுனியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்தது.நயினா தீவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடைய படிப்புத் தேவைகளுக்காக ஓர் ஆண்டு விடுமுறையில் பாடசாலையை விட்டுப்போகிறார்.அவரை வழியனுப்ப விரும்பாத பிள்ளைகள் வகுப்பறையின் கதவை மூடி அவரைப் போக விடாமல் தடுத்து அழுகிறார்கள்.ஆண் பிள்ளைகள் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறார்கள்;அழுகிறார்கள்.பெண் பிள்ளைகள் தங்களுக்குள் ஒரு கூட்டமாக நின்று ஒருவர் மற்றவருடைய தோளில் கைகளை போட்டு வட்டமாக நின்று அழுகிறார்கள்.

இது ஒரு காட்சி.இன்னும் ஒரு காட்சி யாழ்ப்பாணம் டெம்பிள் ரோட்டில் இடம்பெற்றது.ஒரு கொலையும் தற்கொலையும்.சமையற்கலை நிபுணரான ஒரு பெண்ணை அவருடைய மாணவர் ஒருவர் கொலை செய்துவிட்டு அதைத் தடுக்க முற்பட்ட அந்தப் பெண்ணின் தாயாரையும் காயப்படுத்தி விட்டு தானும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்கிறார்.இந்தக் காட்சியை முன்வைத்து சமூகஊடக வலைத்தள பஞ்சாயத்துக்கள்,கட்டைப் பஞ்சாயத்துக்கள் விதம்விதமான தீர்ப்புகளை வழங்கினார்கள்.அந்த செய்தியும் ஆசிரியரும் மாணவ-உறவு சம்பந்தப்பட்ட ஒரு செய்திதான்.ஆனால் கெட்ட செய்தி.

மேற்கண்டவாறான ஒரு கல்விச் சூழலில்,குறிப்பாக நமது நாட்டின் போட்டிப் பரீட்சைக் கல்விச் சூழலில்,உலகம் முழுவதுமான செயற்கை நுண்ணறிவுச் சூழலில்,ஆசிரியர்-மாணவ உறவில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன?

ஆசிரியரின் இடத்தை செயற்கை நுண்ணறிவு கைப்பற்றியிருக்கும் ஒரு காலகட்டம் இதுவென்று கூறப்படுகிறது.தொகுக்கப்பட்ட தகவல்களை பகுப்பாய்வு செய்யும் விடயத்தில் செயற்கை நுண்ணறிவு ஒரு புதிய ஆசிரியராக எழுச்சி பெற்றிருக்கிறது என்பது உண்மை.ஆனால் அந்த ஆசிரியருக்கு இதயம் கிடையாது.இதயமுடைய ஓர் ஆசிரியர் பிள்ளையை அதன் உளவியலை அறிந்து ஆற்றப்படுத்துவார்.ஆனால் செயற்கை நுண்ணறிவுச் செயலிக்கு அந்த பொறுப்பும் இல்லை;அந்த பரிமாணமும் இல்லை.பிள்ளைக்கும் செயலிக்கும் இடையே இதயபூர்வமான உறவு இல்லை.

செயலிகளின் கைதிகளாக உள்ள பிள்ளைகளில் பெரும்பாலானவை ஆழமான வாசிப்பை இழந்துவிடுகின்றன.ஆழமான யோசிப்பை;எதிலும் ஆழமான தியானிப்பை இழந்துவிடுகின்றன.இதனால் எல்லாவற்றையும் “ஸ்குரோல்” பண்ணிக் கடக்கின்ற, எல்லாவற்றிலும் நுனிப்புல் மேய்கின்ற,எதிலும் கூர்ந்து கவனிக்காத,ஆழமாகப் பார்க்காத,கவனத்தை ஒன்றுகுவிக்காத, ஓர் உளவியல் மேலெழுகிறது.இதனை ஆங்கிலத்தில் “டூம் ஸ்க்ரோலிங்” என்று அழைக்கிறார்கள்.இதன் விளைவாக ஒரு கட்டத்தில் பிள்ளைகளின் மூளை அழுகிவிடும் என்ற பொருள்பட “ப்ரெயின் ரொட் ” என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.இவ்வாறு எதையும் கூர்ந்து கவனிக்காமல்,நுனிப்பில் மேயும் பிள்ளைகளை,அந்த நோய்க்கூறான பண்பிலிருந்து காப்பாற்றுவதற்கும்,பிள்ளைகளின் மூளைகள் அழுகுவதிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கும்,சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூர் அரசாங்கம் ஒரு வித்தியாசமான அறிவிப்பை விட்டது. 15 நிமிடங்கள் ஊன்றி வாசிக்கும் பிள்ளைகளுக்கு சன்மானம் தரப்படும் என்பதே அது.

அதுபோலவே ஸ்வீடன்,பின்லாந்து,நோர்வே,டென்மார்க்,பிரான்ஸ்,இத்தாலி ஆகிய நாடுகள்,பள்ளிக் கல்வியில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட “டப்லட்கள்” மற்றும் டிஜிட்டல் திரைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதைத் தொகுத்து உணர்ந்திருக்கின்றன.தொடர்ச்சியான டிஜிட்டல் திரைப் பயன்பாட்டின் விளைவாக பிள்ளைகளின்  வாசிப்புத் திறண்,நினைவாற்றல் மற்றும் கவனம் செலுத்தும் திறன் குறைவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.இதனால், இந்தநாடுகள் மீண்டும் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள்,குறிப்புப்புத்தகங்கள்,பேனா,காகிதம்…..ஆகியவற்றைப் பள்ளிகளில் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.ஸ்வீடனின் கல்வி அமைச்சர்,”மாணவர்களுக்கு அதிக பாடப்புத்தகங்கள் தேவை”என்று கூறியுள்ளார்.டென்மார்க் பள்ளிநேரங்களில் கைபேசிகளைத் தடைசெய்து, அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் க்ரோனர் முதலீடு செய்து வருகிறது.நோர்வே,சிறிய மாணவர்களுக்கான AI கருவிகளின் பயன்பாட்டையும் இந்த ஆண்டு கட்டுப்படுத்தியுள்ளது.

கல்வியலாளர்களும் உளவியலாளர்களும் கூறுகிறார்கள்,கையால் எழுதுவது நினைவாற்றலை பலப்படுத்துகிறது என்று.தட்டச்சு செய்வதால் அதே அளவிலான பயன் கிடைப்பதில்லை என்று.அதாவது “டூம் ஸ்க்ரோலிங்”, “பிரைன் ரொட்” போன்ற ஆபத்துக்களை மேற்கு நாடுகள் உணரத் தொடங்கிவிட்டன.அவற்றுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளிலும் இறங்கி விட்டன.இலங்கையிலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்கள் கைபேசிகளை பயன்படுத்துவதற்கு சட்டத்தடை உண்டு.

அண்மையில் ஜப்பான் நாடு குழந்தைகள் மத்தியில் மதத்தின் மீதான அச்சத்தை வளர்ப்பது உளவியல் ரீதியிலான ஒரு துஷ்பிரயோகம் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறது.மதத்தின் மீதான பயத்தை அதாவது பாவம்-புண்ணியம் தொடர்பான பயத்தை பிள்ளைகள் மத்தியில் ஊக்குவிப்பது,அவர்களை உளவியல் ரீதியாகத் துஸ்பிரயோகம் செய்வது என்று யப்பான் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் நமது நாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதனையானது அந்த வயது பிள்ளைகளுக்கு ஓர் உளவியல் சித்திரவதை என்பதை எத்தனை கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டி விட்டார்கள்? எத்தனை உளவியலாளர்கள் சுட்டிக்காட்டி விட்டார்கள்?ஆனால் நாடு அந்தச் சோதனையைக் கைவிடத் தயாராக இல்லை.இலங்கைத்தீவின் கல்வி முறையில் எந்தப் பெரிய மாற்றங்களைச் செய்தாலும் அது முதலில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் உளவியல் தீமைகளை அகற்றுவதில் இருந்துதான் தொடக்கப்பட வேண்டும்.

கடந்த 14ஆம் திகதி,அலரி மாளிகையில்,புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த உண்மையான,சரியான தகவல்களை மக்களுக்குத் தொடர்பாடல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘RIES’ (Reform Information & Enquiry Service) உத்தியோகபூர்வ இணையதளத்தை வெளியிடுதல் மற்றும் கல்விச் சீர்திருத்தச் செயன்முறை குறித்து மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக ஒரு நிகழ்வு  ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்,கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் உபகுழுவின் தலைவரான பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க,பின்வருமாறு உரையாற்றினார்…. “புதிய சீர்திருத்தங்கள் மூலம் கல்விப் புலத்தில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. மனனம் செய்வதை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் மைய முறையிலிருந்து விலகி, மாணவர்களை மையமாகக் கொண்ட, ஆழமான மற்றும் உண்மையான உலக அனுபவங்களுடன் இணைந்த கற்றல் முறையை நோக்கி நகர்வது இதன்போது இடம்பெறுகின்றது.இதில் அறிவாற்றல் வளர்ச்சிக்கு மேலதிகமாக, பிள்ளையின் உணர்வுபூர்வமான, சமூக, உடலியல் மற்றும் ஒழுக்கவியல் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதே நோக்கமாக அமைகின்றது.21ஆம் நூற்றாண்டின் தேர்ச்சிச் சட்டகமாக அடிப்படை எழுத்தறிவு (தொழில்நுட்ப, நிதி, ஊடக மற்றும் அறிவியல் சார்ந்த), நபரிடைத் தேர்ச்சிகள் (விமர்சனச் சிந்தனை,தொடர்பாடல்) மற்றும் பெறுமானக் கட்டமைப்புடன் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துவது இதன்போது இடம்பெறுகின்றது.மாற்றுக் கற்றல் வழிகளைப் பின்பற்றிப் பொதுக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியை ஒன்றுடன் ஒன்று இணைத்து, 13ஆம் தரம் வரை எந்தவொரு பிள்ளையையும் கைவிடாத பரந்த பாதையொன்றை உருவாக்குவதும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்குள் இடம்பெறுகின்றது.புதிய மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி,இதுவரை இருந்துவரும் நினைவாற்றலைப் பரிசோதிக்கும் இறுதிப் பரீட்சை முறையிலிருந்து விடுபட்டு, மாணவரின் பகுப்பாய்வு, ஆக்கபூர்வமான மற்றும் பிரச்சினையைத் தீர்க்கும் திறன்களைத் தொடர்ச்சியாக அளவிடும் முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம்,தொடர் மதிப்பீட்டின் ஊடாகப் பிள்ளைகளின் திறமைகளைத் தீர்மானிப்பது இதன்போது இடம்பெறுகின்றது”

நல்ல விஷயம்.அதைச் செய்யட்டும்.ஆனால் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையை நீக்குவதும் அதற்குள் அடங்குமா?

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

Next Post

மின் தடை குறித்து விரிவான விசாரணை!

Related Posts

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கை

மின் தடை குறித்து விரிவான விசாரணை!

2026-10-18
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!
இலங்கை

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

2026-10-18
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!
இலங்கை

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

2026-10-18
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!
சினிமா

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

2026-10-18
ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!
அமொிக்கா

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

2026-10-18
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

2026-10-18
Next Post
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

மின் தடை குறித்து விரிவான விசாரணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

மின் தடை குறித்து வரிவான விசாரணை!

0
ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

0
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

0
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

0
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

0
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

மின் தடை குறித்து வரிவான விசாரணை!

2026-10-18
ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

2026-10-18
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

2026-10-18
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

2026-10-18
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

2026-10-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: