ஷிரந்தி ராஜபக்ஷ, பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து நவாலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், முன்னாள் முதல் பெண்மணி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














