2035 ஆம் ஆண்டளவில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ‘மீ-முதியோர்’ நகரமாக மாறும் என்றும், அதன் மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக, அதிகாரப்பூர்வ பெய்ஜிங் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
சீனக் கொள்கை வகுப்பாளர்கள் மக்கள் தொகைத் திட்டமிடலை நாட்டின் பொருளாதார உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக மாற்றியுள்ளனர்.
பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக இந்த ஆண்டு சீன அரசாங்கம் சுமார் 180 பில்லியன் யுவான் (26.92 பில்லியன் அமெரிக்க டொலர்) வரையிலான செலவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2035-ஆம் ஆண்டிற்குள் சீனத் தலைநகரின் குடியிருப்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று ‘பெய்ஜிங் டெய்லி’ ஒக்டோபர் 17 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டின் இறுதியில், பெய்ஜிங்கில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 5.29 மில்லியனாக இருந்தது.
இது அந்நகர மக்கள் தொகையில் ஏறக்குறைய கால் பங்காகும் என்று அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது.
நகர நிர்வாகம் முதியவர்களுக்கான ஆதரவை அதிகரித்து வருகிறது.
இதில் அடிப்படை ஓய்வூதியத்தை உயர்த்துவதும் அடங்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சீனாவின் மக்கள் தொகை 2022-ஆம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது மற்றும் மிக வேகமாக முதியவர்களைக் கொண்ட சமூகமாக மாறி வருகிறது.
இது, உள்நாட்டு நுகர்வை ஊக்குவிப்பதற்கும் கடன் சுமையைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள திட்டங்களுக்குச் சவாலாக அமைந்துள்ளது.
ஓய்வூதிய நிதி ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள நிலையில், பல கோடி மக்கள் பணிச் சூழலிலிருந்து வெளியேறவிருப்பது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.















