புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவ, கோனவில பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 65 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் கழுத்துப் பகுதியில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

















