இங்கிலாந்தில் செவிலியர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணியாளர்களுக்கான பற்றாக்குறை காரணமாக, 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
தேசிய சுகாதார சேவையின் கீழ் இயங்கும் 155 மகப்பேறு பிரிவுகளில் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகள் ஏற்கெனவே இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் உரிய நேரத்தில் மருத்துவச் சேவைகளைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படக்கூடும் எனக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு சேவைகளைப் பாதுகாக்கவும், பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படுவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

















