இணையம் வழியாக நறுமணங்களைப் பரிமாறி, தொலைதூரத்தில் அவற்றை மீண்டும் உருவாக்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சீன ஆய்வாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள ‘Scentronic’ என்ற இந்தத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நறுமணங்களை அடையாளம் கண்டு, அவற்றை இணையம் வழியாகப் பரிமாறுகிறது.
கேக், தோடம்பழம், பியர் மற்றும் சிவப்பு வைன் ஆகிய நறுமணங்களைக் கொண்டு இந்தத் தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
14 தன்னார்வலர்கள் பங்கேற்ற பரிசோதனையில், மீண்டும் உருவாக்கப்பட்ட நறுமணங்களை அவர்கள் சுமார் 73 சதவீதமான சந்தர்ப்பங்களில் சரியாக அடையாளம் கண்டுள்ளனர்.
எதிர்காலத்தில், காணொளி அழைப்புகளின்போது நறுமணங்களை அனுபவிப்பதற்கும், இணையவழியில் வாசனைத் திரவியங்களை வாங்குவதற்கு முன்பாக அவற்றின் நறுமணத்தைச் சோதிப்பதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தத் தொழில்நுட்பம் இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளது. அனைத்து வகையான நறுமணங்களையும் மீண்டும் உருவாக்கும் அளவுக்கு இது இன்னும் மேம்படுத்தப்படவில்லை.

















