கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயார்ட்ஸ் பிராட்வே பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீட்டின் மேல் மாடியிலிருந்து விழுந்து காயமடைந்த 15 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













