பிரித்தானியாவில் வீடுகளின் வருடாந்த விலை வளர்ச்சி ஒக்டோபர் மாதத்தில் 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
இது கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த வளர்ச்சி வீதமாகும்.
வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, வீடு வாங்குவோரின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக வீடுகளுக்கான கேள்வி மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் வீடமைப்புச் சந்தையில் நிலவும் இந்த மாற்றம், வீடு வாங்கத் திட்டமிடுவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இவ்வாறான சூழலில், எதிர்வரும் மாதங்களில் வீட்டு விலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

















