இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco), எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய விலைகள் நேற்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதன்படி, ‘ஒட்டோ டீசல்’ (Auto Diesel) லிட்டருக்கு 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 397 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘சூப்பர் டீசல்’ (Super Diesel) லிட்டருக்கு 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 543 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், ’92 ஒக்டேன் பெட்ரோல் ‘ (Petrol 92 Octane) லிட்டருக்கு 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாயாகவும், ’95 ஒக்டேன் பெட்ரோல்’ (Petrol 95 Octane) லிட்டருக்கு 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 490 ரூபாயாகவும் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன் விலை தொடர்ந்து 285 ரூபாயாகவே நீடிக்கிறது.













