இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியதைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக வசூலில் சற்று சரிவு ஏற்பட்டிருந்தாலும், திரையரங்குகளில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த அதிரடித் திரைப்படம், உலகம் முழுவதும் 800 கோடி இந்திய ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) அன்று, திரையரங்குகளில் 18 ஆவது நாளை எட்டிய இந்தத் திரைப்படம், இந்தியா முழுவதும் 8,906 காட்சிகளின் மூலம் ரூ. 11.20 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது.
இதன் மூலம், அதன் மொத்த உள்நாட்டு வருமானம் ரூ. 456.30 கோடியாக உயர்ந்துள்ளது.
இது சனிக்கிழமையின் வருமானத்துடன் (ரூ. 9.70 கோடி) ஒப்பிடுகையில் 15.5 சதவீத வளர்ச்சியாகும்.
வர்த்தகத் தரவுத் தளமான ‘சாக்னில்க்’ (Sacnilk)-ன் தகவல்படி, ‘ஜெயிலர் 2’ (Jailer 2) திரைப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் தற்போது ரூ. 807.25 கோடியாக உள்ளது.
அன்றைய ஒட்டுமொத்த வசூலில், படத்தின் அசல் தமிழ் பதிப்பு ரூ. 8 கோடியைப் பங்களித்த நிலையில், இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகள் முறையே ரூ. 1.75 கோடி மற்றும் ரூ. 1 கோடியை ஈட்டின.
2026-ஆம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில், இயக்குநர் ஆதித்யா தாரின் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (ரூ. 1,813.39 கோடி) படத்திற்கு அடுத்தபடியாக ‘ஜெயிலர் 2’ இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
எனினும், ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவின் நீண்டகாலக் கனவான ‘ரூ. 1,000 கோடி வசூல்’ என்ற இலக்கை எட்டும் பயணத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தகத்கது.

















