அண்மைய எரிபொருள் விலை உயர்வுக்கு அமைவாக முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்துறை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதல் கிலோ மீட்டருக்கான கட்டணத்தை 110 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும் இரண்டாவது கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 90 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முன்மொழிவை தேசிய போக்குவரத்து ஆணையத்திடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், கட்டண மானிகளை (fare meters) மாற்றியமைக்கும் பொறுப்புள்ள நிறுவனங்களுடன் கலந்து பேசி, கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.














