இலங்கையிலிருந்து நச்சுப் போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்தில், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘ரதம ஏகத’ தேசிய இயக்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது
இந்த தேசிய நடவடிக்கையின் முக்கிய நோக்கங்கள், நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை ஒழிப்பது, பொதுமக்கள் அதில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்குக் கல்வி புகட்டுவது, மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளான நபர்களை முறையாக மறுவாழ்வுக்கு உட்படுத்துவது ஆகியவை ஆகும்.
அதன்படி, “ஒன்றிணைந்து நிற்கும் ஓர் ஆண்டு” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின் தொடருடன் இணைந்து, கொழும்பு காலி முகத்துவாரத்திலிருந்து கொழுப்பிட்டி சந்திப்பு வரை இன்று காலை 8.00 மணிக்கு போதைப்பொருள் தடுப்பு நடைப்பயணம் நடைபெறுகின்றது
மேலும், “ரதம் ஏகத” தேசிய இயக்கத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு டெம்பிள் ட்ரீஸில் ஒரு சமய மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.














