• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி, எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சுகாதார அமைச்சு உள்ளிட்ட அரச அதிகாரிகளிடம் பலமுறை கலந்துரையாடல்களுக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கான வரிச்சலுகை அடிப்படையிலான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டமை, மருத்துவர்களின் வருமானம் மற்றும் தொழில்சார் கொடுப்பனவுகள் மீதான வரி அதிகரிப்பு ஆகியவை மருத்துவத் துறையினருக்கு மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான அரச துறை சம்பளத் திருத்தத்தின் கீழ், மருத்துவர்களின் மேலதிக நேர மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பங்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பொருளாதார நிலைமை மேம்படும்போது அவற்றை மீள வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் மருத்துவப் பணியாளர்களுக்கான கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகவும், சுகாதார அமைச்சின் கீழ் தற்போது 25,000க்கும் குறைவான மருத்துவர்களே செயற்பாட்டு சேவையில் உள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுகாதாரத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கையை முழுமையாக உள்ளடக்கிய விஞ்ஞானபூர்வமான மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான மீளாய்வு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சுகாதார சேவைகள், நிறுவனங்கள் மற்றும் பிரிவுகள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், ஆளணி எண்ணிக்கை திருத்தப்படாமை சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளதுடன், சுகாதார சேவைகளின் தரத்தைப் பேணுவதிலும் சவால்களை உருவாக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஓகஸ்ட் மாதம் அரசாங்கத்திடம் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்ததாகவும், பலமுறை கலந்துரையாடல்களுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், குறித்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் நாட்டின் பல முக்கிய வைத்தியசாலைகளுக்கு அருகிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நவம்பர் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தின் மூலம் மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், சுகாதாரத் துறையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கையை மீளாய்வு செய்தல் மற்றும் நியாயமான கோரிக்கைகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.

மருத்துவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related

Tags: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்போராட்டம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

Next Post

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

Related Posts

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.
இலங்கை

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

2026-11-08
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்
இலங்கை

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

2026-11-08
சீமெந்து விலை அதிகரிப்பு!
இலங்கை

சீமெந்து விலை அதிகரிப்பு!

2026-11-08
பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

இணையவழி மோசடி சந்தேகத்தில் 32 சீனர்கள் கைது! 

2026-11-08
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!
இலங்கை

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!

2026-11-08
வான்வழிப் பயணத்தில் புதிய அத்தியாயம்: ட்ரோன் சோதனை!
இலங்கை

வான்வழிப் பயணத்தில் புதிய அத்தியாயம்: ட்ரோன் சோதனை!

2026-11-08
Next Post
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் - கம்பவாருதியும் – நிலாந்தன்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

0
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

0
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

0
சீமெந்து விலை அதிகரிப்பு!

சீமெந்து விலை அதிகரிப்பு!

0
பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

இணையவழி மோசடி சந்தேகத்தில் 32 சீனர்கள் கைது! 

0
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

2026-11-08
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

2026-11-08
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

2026-11-08
சீமெந்து விலை அதிகரிப்பு!

சீமெந்து விலை அதிகரிப்பு!

2026-11-08
பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

இணையவழி மோசடி சந்தேகத்தில் 32 சீனர்கள் கைது! 

2026-11-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: