காலநிலை மாற்றம் குறித்து சட்டவாக்கத் துறை அதிக ஆர்வம் காட்டுவது நாட்டுக்கும் உலகுக்கும் ஒரு பெரிய செய்தியைப் பெற்றுக் கொடுக்கின்றது. அனர்த்தம் நிகழ்ந்த பின் நிவாரணம் வழங்கும் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு மேலாக, அனர்த்தத்துக்கு முன்பே பாதகமான நிலைமைகள் உருவாவதைத் தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள், வலுவான கொள்கைக் கட்டமைப்பு, நிறுவனக் கட்டமைப்பு, கொள்கைக் கட்டமைப்பு முன்னெடுக்கப்பட்டதன் பின் மதிப்பீட்டுச் செயல்முறை ஆகிய அனைத்தும் காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.
நமது நாட்டில் சுற்றாடல், வனசீவராசிகள், தாவரங்கள், நிலப்பரப்பு, நீர்வாழ் உயிரியல் அமைப்பு, கடல் சூழல் உள்ளிட்ட சூழல் குறித்து ஆர்வம் காட்டும் நிபுணர்கள், துறைசார் புத்திஜீவிகளை இணைத்துக் கொண்டு, செய்யக்கூடியவற்றையும் செய்ய வேண்டியவற்றையும் கூடிய ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Gen Z தலைமுறை உட்பட அனைவரையும் இணைத்துக் கொண்டு, சுற்றாடல் அமைப்பைப் பாதுகாக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினர் விமர்சித்தாலும், தற்போது பாதுகாப்புப் படையினர், சுற்றாடல் அமைச்சு போன்றவை தலையிட்டு வனவிலங்குகளைப் பாதுகாக்கும் திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்
. Wild Tusker குழுவுடன் இணைந்து செயல்படுவது சிறப்பாக அமையும். யானைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட வனசீவராசிகள் புகைப்படக் கலைஞர்களும் சுற்றாடல் ஆர்வலர்களும் காணப்படுகின்றனர். இவர்கள் யானைகளுக்குப் பெயர் சூட்டி அவற்றைப் பாதுகாக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுள்ளதனால், இவர்களையும் இணைத்துக் கொண்டு யானைகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.














