தமிழகத்தில் தனது தலைமையிலான அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாகச் சந்தித்து அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் இடம்பெறக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய முயற்சிகளுக்கு எவரும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பொறுப்புகளையும் கட்சியின் கொள்கைகளையும் உறுதியாகப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
விஜய்யின் இந்த எச்சரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அதிகாரபூர்வ நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதுவும் முன்வைக்கப்பட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

















