பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் குளிரைத் தொடர்ந்து, இந்த வார இறுதியில் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வேல்ஸின் (Wales) சென்னிபிரிட்ஜ் (Sennybridge) பகுதியில் வெப்பநிலை மைனஸ் 6.6 பாகை செல்சியஸாகக் குறைந்துள்ளது.
கும்ப்ரியாவின் (Cumbria) ஷாப் (Shap) பகுதியில் மைனஸ் 6.5 பாகை செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
இதனிடையே கடும் குளிரால் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், வடமேற்கு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் (West Midlands) பகுதிகளுக்கு மஞ்சள் நிறக் குளிர்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















