பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட், புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பின்னர் மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணமாக, இந்த வாரம் இந்தியாவில் நடைபெறவுள்ள ‘எர்த்ஷாட் பரிசு’ (Earthshot Prize) வழங்கும் நிகழ்வில் தனது கணவர் இளவரசர் வில்லியமுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார்.
அரியணைக்கு அடுத்த வாரிசான 44 வயது வில்லியமும் கேட்டும், மும்பையில் மூன்று நாள் பயணமாகச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
இதில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவும் அடங்கும்.
44 வயதான கேட் மேற்கொள்ளும் இந்தப் பயணம், 2024-ல் புற்றுநோய் பாதிப்பிற்காகத் தடுப்பு நடவடிக்கையாக கீமோதெரபி சிகிச்சை பெற்றுக்கொண்ட பிறகு, அவர் மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணமாகக் கருதப்படுகிறது.
தற்போது அவர் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்திருந்தாலும், அந்த நோய் இன்னும் தனது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்பதாக அவர் கூறுகிறார்.
தன் தந்தை மன்னர் சார்லஸைப் போலவே, சுற்றுச்சூழல் பிரச்சாரத்தைத் தனது மிகப்பெரிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்ட வில்லியம், பருவநிலை மாற்றத்திற்குத் தீர்வுகளைக் கண்டறியும் நோக்கத்தில் 2020-ல் எர்த்ஷாட் பரிசை நிறுவினார்.
இது ஐந்து வெற்றியாளர்களுக்கு அவர்களின் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக தலா £1 மில்லியன் ($1.3 மில்லியன்) வழங்குகிறமையும் குறிப்பிடத்தக்கது.
















