இலங்கைக்குக் கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு “தாழமுக்கமாக” வலுவடைந்துள்ளது.
இத் தொகுதி இன்று காலை 11:30 மணிக்கு, திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 630 கி.மீ தூரத்தில் வடகிழக்கு திசையிலிருந்து சற்று கிழக்காக நிலை கொண்டிருந்தது.
இத் தொகுதி தொடர்ந்தும் இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாளை நவம்பர் 16 ஆம் திகதி மாலையளவில் தெற்கு மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு “புயலாக” வலுவடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
இத் தொகுதி நவம்பர் 17 ஆம் திகதியளவில் மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு “தீவிர சூறாவளிப் புயலாக” மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாளை நாடு முழுவதும் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.














