• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையின் அரச வரியல்லா வருமானம் 39.1 சதவீதத்தால் அதிகரிப்பு!

இலங்கையின் அரச வரியல்லா வருமானம் 39.1 சதவீதத்தால் அதிகரிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/15
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசாங்கத்தின் வரியல்லா வருமானம், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1 சதவீதத்தால் அதிகரித்து 314.8 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 226.2 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் வரியல்லா வருமானம் 7.9 சதவீதமாகப் பங்களித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியிடமிருந்து கிடைத்த 42.1 பில்லியன் ரூபாய் இலாபப் பரிமாற்றம் உள்ளிட்ட இலாபங்கள் மற்றும் பங்காதாயங்கள், வாடகை வருமானம், அபராதங்கள், கட்டணங்கள், வட்டி வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகள் அதிகரித்தமையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதன்படி, வட்டி வருமானம் கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 43.4 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு 19.1 சதவீதத்தால் அதிகரித்து 51.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, அபராதங்கள் மற்றும் ஏனைய கட்டணங்கள் மூலம் கிடைத்த வருமானம் 18.7 சதவீதத்தால் அதிகரித்து 133.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 112.6 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

மேலும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக அறவிடப்படும் கட்டணங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் மூலமான வருமானமும் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வீதம் உயர்த்தப்பட்டமை காரணமாக, இந்தப் பங்களிப்புகள் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானமும் அதிகரித்துள்ளது.

இதன்படி, சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகள் மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 36.6 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு 45.3 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, வாடகை வருமானம் 31.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 3.9 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட இந்த வருமானம், இவ்வாண்டு 5.1 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

அத்துடன், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிடமிருந்து கிடைத்த இலாபங்கள் மற்றும் பங்காதாயங்கள் மூலம் பெறப்பட்ட வருமானமும் 36 சதவீதத்தால் அதிகரித்து 19.9 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இது 14.6 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

மேலும், 2026ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் நிர்ணயித்திருந்த 360 பில்லியன் ரூபாய் வரியல்லா வருமான இலக்கில், முதல் எட்டு மாதங்களுக்குள்ளேயே 87.4 சதவீதத்தை எட்டியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: CBSLnon-tax revenueஇலங்கை மத்திய வங்கிவரியல்லா வருமானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்; ஏவுதளத்திற்கே திரும்பிய ஸ்டார்ஷிப்!

Related Posts

எரிவாயுவுக்கு தட்டுப்பாடு
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு; அதிகாரிகளுக்கு அழைப்பு!

2026-11-15
161 ஊடகவியலாளர்களுக்கு ‘அசிதிசி’ புலமைப்பரிசில்!
இலங்கை

161 ஊடகவியலாளர்களுக்கு ‘அசிதிசி’ புலமைப்பரிசில்!

2026-11-15
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!

2026-11-15
விமானப் போக்குவரத்துக் கோளாறு: அமெரிக்காவில் தொடரும் நெருக்கடி!
அமொிக்கா

விமானப் போக்குவரத்துக் கோளாறு: அமெரிக்காவில் தொடரும் நெருக்கடி!

2026-11-15
சீனாவில் மூன்று வல்லரசுத் தலைவர்கள் சந்திப்பு?
ஆசிரியர் தெரிவு

சீனாவில் மூன்று வல்லரசுத் தலைவர்கள் சந்திப்பு?

2026-11-15
பொதுத்துறை ஊதியங்களுக்காக ஆண்டுதோறும் 900 பில்லியன் ரூபா செலவு!
இலங்கை

பொதுத்துறை ஊதியங்களுக்காக ஆண்டுதோறும் 900 பில்லியன் ரூபா செலவு!

2026-11-15

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01

0
விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்; ஏவுதளத்திற்கே திரும்பிய ஸ்டார்ஷிப்!

விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்; ஏவுதளத்திற்கே திரும்பிய ஸ்டார்ஷிப்!

0
எரிவாயுவுக்கு தட்டுப்பாடு

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு; அதிகாரிகளுக்கு அழைப்பு!

0
161 ஊடகவியலாளர்களுக்கு ‘அசிதிசி’ புலமைப்பரிசில்!

161 ஊடகவியலாளர்களுக்கு ‘அசிதிசி’ புலமைப்பரிசில்!

0
இளவரசர் வில்லியமுடன் இந்தியா செல்கிறார் வேல்ஸ் இளவரசி கேட்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: