உத்தராகண்டின் ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில், குலார் சந்தைக்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து, 30 முதல் 35 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள நீரோடையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு, அம்பியூலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், பியாசி மற்றும் தல்வாலாவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த மாநில பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியைத் தொடங்கின. காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் இணைந்துகொண்டனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளை வெளியேற்றும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.















