2026 ஆம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை விட அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 2,402 பில்லியன் ரூபா வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 16 ஆம் திகதி வரையில் 2,441.9 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கைத் தாண்டுவதில் திணைக்களம் வெற்றியடைந்துள்ளதாக 2026 நவம்பர் 17 ஆம் திகதியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2025 நவம்பர் 16 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், 2026 நவம்பர் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 491 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 115 சதவீத அதிகரிப்பாகும்.
இந்த வருமான அதிகரிப்பானது வரி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வருமான சேகரிப்பின் செயற்றிறனை மேம்படுத்துதல், மக்களின் வரிச் சட்ட இணக்கத்தை அதிகரித்தல் மற்றும் வரி விதிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.















