இயக்குநர் நிதேஷ் திவாரியின் ‘ராமாயணம்’ திரைப்படம், வெளியான 13 நாட்களில் உலகம் முழுவதும் 1,483.50 கோடி இந்திய ரூபாவை வசூலித்து 1,500 கோடி ரூபா என்ற மைல்கல்லை நெருங்கியுள்ளது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடித்துள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் மொத்தம் ரூ. 1,742 கோடி வசூலித்த ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சாதனையை எட்டுவதற்கு இன்னும் ரூ. 258.50 கோடி மட்டுமே தேவைப்படுகிறது.
இந்தத் திரைப்படம் இந்தியாவில் ரூ. 821.30 கோடி நிகர வருவாயைப் பெற்றுள்ளது, அதே சமயம் வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்து ரூ. 502 கோடி கிடைத்துள்ளது.
இருப்பினும், இரண்டாவது வாரத்தில் உள்நாட்டு வணிகம் மந்தமடைந்தது; 13-வது நாளில் ஈட்டிய வசூல், அதற்கு முந்தைய நாளை விட 10.3 சதவீதம் குறைந்துள்ளது.
வர்த்தகத் தரவுத் தளமான ‘சாக்னில்க்’ (Sacnilk)-இன் தகவல்படி, ‘ராமாயணம்’ திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தம் 1,483.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதில் இந்தியாவின் மொத்த வசூல் 981.50 கோடி ரூபாயாகும்; இதில் நிகர வருமானம் 821.30 கோடி ரூபாயாகும்.
சர்வதேசச் சந்தைகளில் இருந்து 502 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, இது உலகளாவிய மொத்த வசூலில் 33.8 சதவீதமாகும்.
13 ஆவது நாளில், இப்படம் இந்தியாவில் ரூ. 28.70 கோடி நிகர வருவாயைப் ஈட்டியது; இது 12 ஆவது நாளில் ஈட்டிய ரூ. 32 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவுதான்.
இருப்பினும், தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்த்து வந்த இப்படம், முதல் 13 நாட்களில் இந்தியா முழுவதும் மொத்தம் 3,05,513 காட்சிகளைக் கண்டமையும் குறிப்பிடத்தக்கது.















