ஆசியாவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை ‘ஏ’ அணி இன்று (21) ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
கட்டாரை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் இந்தத் தொடரின் குறித்த போட்டி, இலங்கை நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பவன் ரத்நாயக்க தலைமையிலான இலங்கை ‘ஏ’ அணி, தனது முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்திருந்தது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து, இன்றைய போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

















