எஸ்.ஹரியதர்ஷனி
ஐரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்து அரசாங்கத்தின் புதிய ஒப்பந்தம், அப்பகுதியில் உள்ள வணிகங்களுக்கு “முற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது” என வடக்கு அயர்லாந்து செயலாளர் சர் கிறிஸ் பிரையன்ட் ( Sir Chris Bryant) பாராட்டியுள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் ( Brussels) ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் Andy Burnham ஒப்புக்கொண்ட இந்த ஒப்பந்தம் , உணவு மற்றும் விவசாய ஏற்றுமதி, மாசு உமிழ்வு வர்த்தகம் மற்றும் இளைஞர் அனுபவத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு துறைகள் மீதான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
சுகாதார மற்றும் தாவர சுகாதார (SPS) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சோதனைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பது வடக்கு அயர்லாந்திற்கு மிகவும் பொருத்தமான அம்சம் என வடக்கு அயர்லாந்து செயலாளர் தெரிவித்துள்ளார் .
தற்போதைய பிரெக்ஸிட் பிந்தைய விதிகளின்படி, வடக்கு அயர்லாந்து ஏற்கனவே சுகாதார மற்றும் தாவர சுகாதார விதிகளில் அந்த கூட்டமைப்புடன் இணக்கமாக உள்ளது.
இதேநேரம் இந்த ஏற்பாடு ஐக்கிய ராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்து வடக்கு அயர்லாந்திற்குள் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் கோரும் ‘அயர்லாந்து கடல் எல்லை’ என அழைக்கப்படும் பகுதியை உருவாக்க வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.













