2026 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 6.9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் கடந்த நவம்பர் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நிலவிய பெறுமதியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 6.9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும், கடந்த நவம்பர் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் முந்தைய வாராந்த அறிக்கையில், ரூபாவின் பெறுமதி 6.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி, ஒரே வார காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி விகிதம் மேலும் 0.1 சதவீதப் புள்ளியால் அதிகரித்துள்ளது.
இதன் மூலம், ஆண்டின் ஆரம்பத்தில் நிலவிய பெறுமதியுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் பலவீனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












