• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

எல்லை தாண்டிய இணையவழி நிதி மோசடி வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதையும், அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகம் (FBI) மற்றும் அமெரிக்க நீதித்துறையின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு மேற்கொண்ட ஒரு வாரகால விசேட விஜயத்தை இன்று (22) நிறைவு செய்துள்ளது.

நவம்பர் 16 முதல் 22 ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின்போது, அமெரிக்க அதிகாரிகள் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸின் பல்வேறு முக்கிய விசாரணைப் பிரிவுகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இதில், கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIU), மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் தொழில்நுட்ப உதவிப் பிரிவு (TAU) ஆகியவை உள்ளடங்குகின்றன.

இலங்கையில் இயங்கிவரும் மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதும், அவற்றின் ஊடாக அமெரிக்க மற்றும் இலங்கைப் பிரஜைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளை முறியடிப்பதும் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

இதன்போது, இரு நாடுகளின் அதிகாரிகளும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய, இலங்கையில் இடம்பெற்றுவரும் இரண்டு முக்கிய மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகளின் புலனாய்வு உத்திகள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட 80க்கும் மேற்பட்ட இலத்திரனியல் சாதனங்களிலிருந்து டிஜிட்டல் ஆதாரங்கள் மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், டிஜிட்டல் ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்வது தொடர்பான விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், எல்லை தாண்டிய குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், இணையவழிக் குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வலுவான வழக்குகளைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அடித்தளத்தை உருவாக்க உதவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய குற்றவியல் வலையமைப்புகள் உலகளாவிய ரீதியில் பல பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இத்தகைய குற்றங்களை முறியடிப்பதற்கு சர்வதேச சட்ட அமுலாக்கத் தரப்பினருக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் இரு நாடுகளின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க FBI அதிகாரிகளின் விஜயம் நிறைவடைந்துள்ள போதிலும், மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பது, குற்றவியல் வலையமைப்புகளின் செயற்பாடுகளை முடக்குவது மற்றும் இரு நாடுகளினதும் மக்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

blank

Related

Tags: cyber financial fraudFBIஇணையவழி நிதி மோசடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரி செலுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!

Related Posts

பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!
இலங்கை

வரி செலுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!

2026-11-22
ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!
இலங்கை

ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

2026-11-22
கொள்ளுப்பிட்டியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

கொள்ளுப்பிட்டியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-11-22
மஞ்சள் சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி!
இலங்கை

மஞ்சள் சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி!

2026-11-22
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
இலங்கை

DMT இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

2026-11-22
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கை சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் –  பிரதமர்
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கை சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் – பிரதமர்

2026-11-22

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்

இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்

0
பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!

வரி செலுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!

0
ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

0
குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: