இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 2025 ஜனவரி முதல் 2026 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 27,581.40 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கொட்டாவை முதல் மத்தளை வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மூலம் குறித்த காலப்பகுதியில் 11,486 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பகுதி மூலம் 7,282 மில்லியன் ரூபாவும், பேலியகொடை முதல் கட்டுநாயக்க வரையிலான அதிவேக நெடுஞ்சாலை மூலம் 2,560.05 மில்லியன் ரூபாவும் வருமானமாகக் கிடைத்துள்ளது.
இவ்வாறு குறித்த மூன்று அதிவேக நெடுஞ்சாலைகள் மூலமும் மொத்தமாக 21,328.05 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மூலம் குறித்த காலப்பகுதியில் 6,251 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2025 ஜனவரி முதல் 2026 ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் மொத்தம் 27,581.40 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.














