கிழக்கு மாகாணம்

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

ஊடகத்துறையில் AI  தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி திறம்படச் செயற்படுவது தொடர்பான பயிற்சி நெறி ஒன்று நேற்று  மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் அமைந்துள்ள...

Read moreDetails

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மைக்காலமாக கடலரிப்பு தீவிரமடைந்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ஒலுவில்...

Read moreDetails

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகள் கைது!

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம்...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டடத்திற்கான அடிக்கல்...

Read moreDetails

மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுப்புக்கள் தீவிரம்

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இன்று வரை திடீர் சோதனைகள் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் அதிகாலை 2 மணி முதல் 6...

Read moreDetails

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்...

Read moreDetails

மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் வியாபாரத்துக்காக கஞ்சா கடத்தி சென்ற கொக்கடிச்சோலை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த இரு பிரபல வியாபாரிகள் 600 கிராம் கேரளா...

Read moreDetails

கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கருப்பைக் கழுத்து புற்றுநோய் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில்இ சுகாதார வைத்திய...

Read moreDetails

மட்டக்களப்பில் முறையான கழிவகற்றல் திட்டம் இல்லாததால் பாதிக்கப்படும் மக்கள்!

மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும் மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் பல முறைப்பாடுகளை முன்வைத்தும் அதற்கான தீர்வுகள் இன்றுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கழிவகற்றல் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று வரை ஒரு முறையான கழிவகற்றல் திட்டம் உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு பிரதேச சபை ஊடாக கழிவுகள் சேகரிக்கப்படுகின்ற போதும் மாவட்டத்தில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த கழிவுகளையும் மீள் சுழற்சி செய்து முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான இடமோ அல்லது ஒரு செயற்றிட்டமோ இதுவரை உருவாக்கப்படவில்லை. காலத்திற்கு காலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கும் அவற்றில் இருந்து பசளை தயாரிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் கூட்டங்கள் நடைபெற்ற போதும் இதுவரை ஒரு உருப்படியான திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. இயற்கை வளங்களால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் பசுமை தாயகமாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டம் அதன் கடல் வளம்இ உப்பாறுஇ நன்னீர் வாவிகள் மற்றும் நீர்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வாழ்வாதார அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு கிடைக்கும் மீன்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் அரிய இயற்கை வளங்கள் அனைத்தும் குப்பைகள்இ பிளாஸ்டிக் கழிவுகள், இரசாயன கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நீரியல் உயிரினங்கள் மட்டுமன்றி மனித சுகாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும் மத வழிபாட்டு தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும் நிலையான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்தார்

Read moreDetails
Page 19 of 219 1 … 18 19 20 … 219
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist