தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து அச்சத்தில் இருக்கும் குழுக்கள் பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தொிவித்துள்ளாா்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வெற்றி குறித்து அச்சத்தில் இருக்கும் குழுக்கள் சில தமக்கு சார்பான ஊடகங்களை பயன்படுத்தி பல்வேறு அவதூறுகளை பரப்புகின்றனர்.
ஜக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துள்ள பொதுஜன பெரமுன போன்ற குழுக்கள், எம்மீது வன்முறையாளர்கள் என்ற முத்திரையை குத்த முயற்சிக்கின்றனர்.
2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அன்று கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற சில நடவடிக்கைகளை புதிய காணொளிகளாக்கி வெளியிட்டுள்ளனர்.
ஆனால் வன்முறைக்கு தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பற்றி அனைவரும் காணொளிகளில் பார்த்திருந்தனர் என்பதே உண்மை.
முதலில், வெளியாகும் வீடியோக்களைப் பார்த்து எவரும் கவலைப்பட வேண்டாம்.
தற்போது தொலைபேசி அழைப்புகள் மூலம் சிலருக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளன.
இதுபோன்ற மிரட்டல்கள் வரும் தொலைபேசி எண்களை, உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு நாம் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்
தகவல் தெரிவித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தொிவித்தாா்.