தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கியதற்காக முக்கிய நோக்கங்கள் தொடர்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது.
கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், க.அருந்துவபாலன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், காக்கா என்று அழைக்கப்படும் மனோகரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அரிய நேத்திரன் ” நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில், இலங்கையில் இருக்கக்கூடிய ஈழ தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை. எந்த ஜனாதிபதியும் எங்களுக்கான ஒரு தீர்வை தரவில்லை .
என்னை பொது வேட்பாளராக ஆதரித்ததன் பின்னராக புலம்பெயர்ந்து இருக்கின்ற தமிழ் மக்களை ஒருமித்த நிலைமை காணக் கூடியதாக இருக்கிறது .
அவர்கள் எல்லோரும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். உலகத்திலே எந்த ஒரு நாடும் இல்லாதவாறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவழங்கி வருகின்றனர்.
நான் வெற்றி அடைய வேண்டும் என்றால் நாங்கள் நாங்களாக இருக்க வேண்டும் பொதுமக்கள் பொதுமக்களாக இருக்க வேண்டும்” இவ்வாறு பொது வேட்பாளர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.