மியன்மாரில் இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
மியன்மார் நாட்டில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.
நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இராணுவம், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
மியன்மாரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல். நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதல் இது.
ஜனநாயக அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மத்தியில் பொருளாதார அபராதங்களை உயர்த்துவதற்கான 2016ஆம் ஆண்டு முடிவை உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படும்.
இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மியன்மாரில் மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடலாம்’ என கூறினார்.